ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன் முதலில் ..
நான் தமிழில்
அறிஞர் இல்லை,
முனைவரும் இல்லை ..
தமிழுக்கு அறிமுகமானவன்,
தமிழின் ஆழம் அறியமுனைபவன்,
தத்தித் தத்தித் தவழும் மாணவன்... அவ்வளவே ..
திருக்குறளுக்கும் நாலடியாருக்கும் இன்றைய தமிழில், எளிய வெண்பாவில் தெளிவுரைகள் தரும் பாக்கள் சமைத்து முடித்துவிட்டேன் என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகப் பெருமையும் மகிழ்வும் அடைகிறேன் ..
அந்த நெடும்பயணத்தின் முடிவில்....
திருக்குறள் / நாலடியாருக்கு இன்று நம்மிடம் இருக்கும் நம்முன்னோர்களின் விளக்கங்கள்/ தெளிவுரைகளில் இருந்து நான் 150க்கும் மேற்பட்ட இடங்களில்... ஒரு வார்த்தையிலோ / மொத்தப் பாவுக்கான விளக்கத்திலோ மாற்றுக் கருத்துகளைக் கொண்டுள்ளேன் .. அதுபற்றிய என்னுடைய கோணத்தை ’நக்கீரன் வீட்டுக் கைத்தடி’யாய் ...உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே...
விளக்கங்களில் தவறுகளைக் ( அப்படி ஒன்று இருந்தால்... ) களைய வேண்டுமென்று , இங்கே நான் எடுத்துவைக்கும் கருத்துகளில் சில, ஆர்வக்கோளாறின் காரணமாக, தவறாகக் கூட இருக்கலாம். சான்றோர்கள் அதைப் பொறுத்து , சுட்டிக்காட்டித் திருத்த வேண்டுகிறேன் ...
அதுபோலவே .. எனது வாதத்தையும், கருத்துகளையும் சிறிதேனும் கணக்கில் கொண்டு, நீதியரசராய் நின்று இரு தரப்பு விளக்கங்களையும் ஆராய்ந்து, நல்ல தீர்ப்பளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்


அன்பின் திரு துரை,
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள் சகோதரரே. பல வெற்றிப் படிகளைக் கடந்து வந்துள்ளீர்கள். மேலும், மேலும் உயர பிரார்த்தனைகள்.
அன்புடன்
பவள சங்கரி
வாழ்த்துக்கள் சகோதரரே!
ReplyDelete